|
ஸ்ரீ வித்தக வினாயகர், ஸ்ரீ செல்லி அம்மன் உடனாய
அருள்மிகு வீரபத்ரசுவாமி
திருக்கோயில்
சாத்தனூர், ஆலங்குடி (குருஸ்தலம்) வழி, வலங்கைமான்
(Tk) திருவாரூர்
(Dt)
தமிழ்நாடு - 612801
- - - - - - -
வினை தீர்க்கும் ஸ்ரீ வீரனார் திருத்தலம்
- - - - - - -
ஜீரணோத்தாரண
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 25.03.2015 புதன்கிழமை 10 to 12 AM மற்றும் ஸ்ரீ
வீரனார் சுவாமியின் அருளாடல்கள்.
கடவுள் நம்பிக்கை என்பது கிராமப்புரங்களில் அதிகம்.
ஆனால் கைமேல் பலன் இருந்தால் மட்டுமே மக்களால் தொடர்ந்து அந்தந்த கோவில்களில்
வழிபாடுகள் சிறப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முறையில் எந்த பிரார்த்தனையாக
இருந்தாலும், அதில் உண்மையும், நேர்மையும், பக்தியும் இருக்குமானால், அப்படி ஒரு
ஆச்சரியப்படத்தக்க வகையில், பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி
வைக்கின்ற காவல் தெய்வமாகவும், தவறு இழைத்தவர்களுக்கு தக்க தண்டனையும்,
நல்வர்களுக்கு நன்மையையும் அருளவல்ல, ஒரு ஒப்பற்ற வீரசைவ தவயோகி போல இங்கே மகத்தான
தெய்வசக்தி படைத்தவராக 9 அடி உயரத்தில், ராஜ கம்பீரமாக நின்ற நிலையில், ஸ்ரீ
வீரனார் சுவாமிகள் பக்தர்களின் பால் பேரருள் பாலித்து வருகிறார்.
மிகவும் புராதனமான
இந்தக்கோவிலில் நமது பிரச்சினைகளை எழுதி அவர் பாதத்தில் சமர்ப்பித்து, அதற்கான ஆலய
நிர்வாக கட்டணம் செலுத்திவிட்டால், அதிவிரைவில் எந்த பிரச்சினைக்கும், இவர் அருளால்
நேர்மையான நல்லதீர்வு கிடைத்து விடும் (அவரவர்கள் யோகத்தைப்பொருத்து சிவத்திரு
பூசாரியார் மேல் அருள் வந்து உத்தரவும் கிடைக்கலாம்). அதனால்தான் அபிஷேக ஆராதனைகள்
பெரிய அளவில் அனுதினமும், பக்தர்களால் நடந்தவண்ண மிருக்கின்றன. மிகுந்த நற்பலனையும்
அடைகிறார்கள். நீங்களும் ஒருதடவை நேரில்வந்து வேண்டிக்கொள்ளுங்கள். கைமேல் நல்ல
பலனைப்பெறுங்கள்.
அதுமட்டுமல்லாது, சுவாமிமலை, வைதீஸ்வரன் கோவில், சென்னை, கடலூர்,
மலேஷியா, கனடா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் வாழும் வேத ஆகமம் கற்ற, கோவில்
அர்ச்சகர் பணிபுரியும் அநேக சிவாச்சாரியார்களுக்கெல்லாம் இந்த சுவாமிதான் காக்கும்
குல தெய்வமாக விளங்குகிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மை.
பார்த்த மாத்திரத்தில்
பரவசப்பட்டு ஆச்சர்யமும், பயபக்தியும், தெய்வீகப் பேரானந்தமும் கொண்டு
திரும்பிச்செல்ல மனமின்றி சந்நிதியிலேயே நிற்கச்செய்யும், ராஜ வசீகரத்
திருமேனியுடன் இவரை நேரில் மட்டும்தான் தரிசிக்க முடியும் (போட்டோ, வீடியோ
மூலவரிடம் அனுமதி இல்லை). எந்தச்சிக்கலானாலும், பிரச்சினையானாலும், உடனே நீங்கள்
அதிலிருந்து விடுபட்டு, எல்லா நலமும், லட்சுமிகடாட்சமும் பெற உடனே வாருங்கள்,
சுவாமியைக்காணுங்கள். உங்கள் துன்பங்கள் காணாமல் போகும். இது உண்மை!! முதலில்
கோவில் எதிரே உள்ள வீர புஷ்கரணியில் நீராடி, இங்கே வீற்றிருக்கும் வித்தக
வினாயகருக்கு அருகம்புல் சாற்றி, மாலை அணிவித்து, இனிப்பு படைத்து, தேங்காய்
உடைத்தபின்பு, தாயாராக வீற்றிருக்கும் ஸ்ரீ செல்லியம்மனாகிய ஸ்ரீ காளிகா தேவிக்கு
மஞ்சள், குங்குமம், மாலை, வஸ்த்திரம், அர்ச்சனை செலுத்தியபின்பு, ஸ்ரீ மகா வீரனார்
சுவாமியிடம் கோரிக்கை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். வடமொழியில், "சுபஸ்ய சீக்ரம்"
என்பார்கள் - "நன்றேசெய் அதை இன்றே செய்".
வந்து பாருங்களேன்! வழிபிறக்கட்டும்!!
ஸ்ரீ வீரனார் சுவாமி ரூபத்யானம்
ஸாந்த்ர நீர தசங்காசம் கர்ணவிஸ் ராந்த மஸ்ருகம் |
தம்ஷ்ட்ரா
கராள வக்த்ரம் சப்ரு குடீக்ருத நேத்ரகம் |
கரசோபினி லம்ப கட்கஞ்ச தண்டினம்
நீலவாஸஸம் |
வஸன ஜக்ரு தோட்யாணம் வீரமீடே த்ரிபங்கிகம் ||
ஸ்ரீ வீரனார் காயத்ரி
ஓம்
வம் வீராய தண்டஹஸ்தாய வித்மஹே, கராள வக்த்ராய தீமஹி |
தந்நோ தீர: ப்ரஜோதயாத் ||
Kumbabishekam Video
|
அருள்மிகு வீரனார் ஆலய கும்பாபிஷேகத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல ஊர்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்து திருப்பணியிலும், கும்பாபிஷேக விழாவிலும் மகத்தான பங்களிப்பை நல்கி, சிறப்பித்த அன்பர்களுக்கும், கும்பாபிஷேகத்தை சிவாகம முறையில் மிகச்சிறப்பாக நடத்திக்கொடுத்த சிவாச்சார்யப்பெருந்தகையோர் அனைவருக்கும், தமிழ் மறைகள் ஓதுவார், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், நாதஸ்வர வித்வான்கள், கேரள ஜெண்டை வாத்யக்காரர்கள், மற்றும் அன்னம் பாலித்தவர்கள், ஒலி ஒளி அமைப்பாளர்கள், மற்றும் விழா நன்றாக நடைபெறும் வண்ணம் இரவு பகல் பாராது அரும்பணியாற்றிய திருத்தொண்டர்கள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கோவில் மட்டுமல்லாது மேற்படி கிராமத்தில் இருக்கும் முக்கியமான 6 திருக்கோயில்களுக்கும் திருப்பணிகள் நிறைவுசெய்து மஹா கும்பாபிஷேகத்தை சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கேபொருந்த, வெற்றிகரமாக நடத்தி, சாதனை படைத்த கிராம வாசிகளுக்கும், திருக்கோயில் நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதோடு, இறை நம்பிக்கை கொண்ட அனைவரின் சார்பாகவும் வேண்டி, ஸ்ரீ வித்தக வினாயகப்பெருமான், ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு வீரனார் சுவாமியின் திருவருள் இவர்கள்பால் என்றும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறோம்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு,
"ஆகம அலங்கார கலாரத்னம்", "இறைசீர் பரவுவார்", "ஜோதிஷ நவநிதியம்"
சிவஸ்ரீ. M. சந்திரசேகர குருக்கள்,
தலைமை அர்ச்சகர்: அருள்மிகு முருகவேள் திருக்கோயில், சென்னை
- 2 (ஓய்வு)
நிறுவனர் & பொதுச்செயலாளர் - தமிழ்நாடு ஆன்மிகப் பேரவை, சென்னை-2, Prop: ஸ்ரீ முருகவேள் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்
சென்னை - 600100
தொலைபேசி:
+91 44 49581878 | அலைபேசி:
+91 9940210273 | மின்னஞ்சல்:
[email protected] | வலைதளம்:
www.jothisha.com
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
|
|